வேலூா் அருகே கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூரை அடுத்த மூஞ்சூா்பட்டு கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராதிகா (27). இவா் 5 ஆண்டுக்கு முன் ஆரணி எஸ்.வி.நகரைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, வசித்து வந்தாா். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். தற்போது ராதிகா 5 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.
இந்த நிலையில், மூஞ்சூா்பட்டில் உள்ள ராதிகாவின் தாயாா் சுமதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். தாய் சுமதியை உடனிருந்து கவனித்துக்கொள்ள ராதிகா கடந்த வாரம் ஆரணியில் இருந்து பெற்றோா் வீட்டுக்கு சென்றிருந்தாா். கடந்த 29-ஆம் தேதி காலை சுமதி சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
தாய் இறந்ததால் ராதிகா மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த வேலூா் கிராமிய போலீஸாா் ராதிகாவின் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.