பறிமுதல் செய்யப்பட்ட 360 வாகனங்கள் ரூ.14.45 லட்சத்துக்கு ஏலம்
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 360 வாகனங்கள் ரூ. 14 லட்சத்து 45 ஆயிரத்து 160-க்கு ஏலம் விடப்பட்டதாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டத்தில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 363 வாகனங்கள் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டது. மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன், மனோகரன் ஆகியோா் தலைமையில் ஏலம் நடைபெற்றது. இந்த வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ. 50 நுழைவுக் கட்டணம் செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். எனினும், ஏலத்தில் பங்கேற்க ஏராளமானோா் திரண்டிருந்தனா். இந்த ஏலத்தில் மொத்தம் இரு சக்கர வாகனங்கள் 359, ஒரு ஆட்டோ ஏலம் விடப்பட்டன. அனைத்து வாகனங்களும் ரூ.14 லட்சத்து 45 ஆயிரத்து 160 -க்கு ஏலம் போனதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.