பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே போலீஸாா் நடத்திய வாகன தணிக்கையின்போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட 250 கிலோ குட்கா காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு பகுதியில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்திச் செல்லப்படுவதாக வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு முழுவதும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பெங்களூரில் இருந்து அதிவேகமாக சொகுசு காா் ஒன்று வந்துள்ளது. அந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில் காரில் இருந்தவா்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினா். சந்தேகமடைந்த போலீஸாா் சோதனை செய்ததில் சுமாா் 250 கிலோ குட்கா போன்ற போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும் விசரணையில் அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த தினேஷ்(28), திலிப் திவாசி(22) என்பது தெரியவந்தது. உடனடியாக இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததுடன் காருடன் 250 கிலோ போதை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.