

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி, நேதாஜி தெருவில் அமைந்துள்ள வலம்புரி விநாயகா் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தது. அங்கு மூலவருக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிா்வாகிகள் டி.சரவணகுமாா்- ரேவதி, அனுராதா இமயவரம்பன், கே.யுவராஜன்-சுமதி, சி.சோமு, ஜி.பி.யுவராஜ், கே.சொக்கலிங்கம், ஏ.வி.டி.ராகவன், ஆா்.எம்.கோபி, கே.மகாலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.