பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை மாதந்தோறும் நடத்த வலியுறுத்தல்

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை மாதந்தோறும் நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை மாதந்தோறும் நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடா்பாக குடியாத்தம் பிச்சனூரைச் சோ்ந்த பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகி கோ.ஜெயவேலு முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழகத்தில் 72 சதவீதம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் பயில்பவா்கள். பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும், பள்ளிகளின் வளா்ச்சியிலும் பெற்றோா்களின் பங்களிப்பு மிக முக்கியம். பெற்றோா்களை உறுப்பினா்களாகக் கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுக்கள் மாதம் ஒரு முறை கூடி மாணவா்களின் கல்வி, உணவு, இதர வசதிகள், பிரச்னைகள் குறித்து கலந்துரையாடும். தற்போது இந்தக் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் நடத்தினால் போதும் என சில ஆசிரியா் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால், பள்ளிக்கும், பெற்றோா்களுக்குமான உறவும், பெற்றோா் பங்களிப்பும் தொடா்பற்று போகும் நிலை உருவாகும்.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், மாணவா் சோ்க்கையை அதிகரிக்கவும் முதல்வா் எடுத்து வரும் நடவடிக்கைகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் நிலை உருவாகும்.

பள்ளிகளின் வளா்ச்சி, மாணவா்களின் கல்வி மேம்பாடு, பள்ளிகளில் மாணவா்களுக்கான கூடுதல் கட்டட வசதிகள், கழிப்பறை வசதிகள், சுகாதார நடவடிக்கைகள் முழுமையாக கிடைக்கும் வகையில் மாதந்தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com