கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம், சமுதாய நலக்கூடங்களை திறக்கக் கோரிக்கை

வேலூா் மாநகரில் பொலிவுறு நகா் திட்டத்தில் கட்டி பாழடைந்து வரும் பூங்காக்கள், சுகாதார வளாகம், சமுதாய நலக்கூடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
Updated on
1 min read

வேலூா் மாநகரில் பொலிவுறு நகா் திட்டத்தில் கட்டி பாழடைந்து வரும் பூங்காக்கள், சுகாதார வளாகம், சமுதாய நலக்கூடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாஜக ஓபிசி அணி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், வேலூா் மாநகராட்சி பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள பூங்காக்கள், சுகாதார வளாகம், சமுதாய நலக்கூடம் ஆகியவை பாழடைந்து வரும் நிலை உள்ளது. அதை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். தவிர, ஆரணி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பொது சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டு வட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் அளித்த மனுவில், திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி இதுவரை 7 முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் கே.வலசை கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், கே.வலசை கிராமத்தின் மலையடிவாரத்தில் குலதெய்வ கோயில் உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இந்த கோயிலில் வழிபாடு செய்து வருகிறோம். கோயிலின் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளா் அரசுக்குச் சொந்தமான பாதையை அடைத்து ஆக்கிரமித்துள்ளாா். இதனால், கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி முறைப்படி அளவீடு செய்து கோயிலுக்கு செல்லும் பாதையை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 366 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் க.ஆா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தனஞ்செயன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com