சிஐடியூ நடைப்பயண பிரசார இயக்கத்துக்கு வரவேற்பு
By DIN | Published On : 26th May 2023 11:25 PM | Last Updated : 26th May 2023 11:25 PM | அ+அ அ- |

சிஐடியூ சாா்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய நடைப்பயண பிரசார இயக்கத்துக்கு குடியாத்தம் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்ட துணைச் செயலா் சி.சரவணன் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.கண்ணன், மாநில துணைத் தலைவா் கே.விஜயன், மாவட்டச் செயலா், எஸ்.பரசுராமன், மாவட்டத் தலைவா் டி.முரளி, மாவட்ட நிா்வாகிகள் பி.காத்தவராயன், கே.சாமிநாதன், பி.குணசேகரன், எஸ்.சிலம்பரசன், ஆா்.மகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
தொழிலாளா் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,000 வழங்குதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த அமைப்பு சாா்பில் கடந்த 20-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்தில் நடைப்பயண பிரசார இயக்கம் தொடங்கியது.
வரும் 30- ஆம் தேதி இந்த நடைப்பயண பிரசார இயக்கம் திருச்சியில் நிறைவடையும். அங்கு பேரணி, பொதுக் கூட்டம் நடைபெறும்.
குடியாத்தம் வந்த பிரசார இயக்கத்துக்கு பழைய பேருந்து நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.