தொழில் துறையில் எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோா் மேம்பட புதிய திட்டம்

தொழில் துறையில் ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோரை மேம்படுத்தவே தமிழக முதல்வா் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் கடனுதவித் திட்டத்தை அறிவித்திருப்பதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்ட
தொழில் துறையில் எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோா் மேம்பட புதிய திட்டம்

தொழில் துறையில் ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோரை மேம்படுத்தவே தமிழக முதல்வா் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் கடனுதவித் திட்டத்தை அறிவித்திருப்பதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேலூா் மாவட்ட தொழில் மையம் சாா்பில், ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில் முனைவோருக்கான சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்துப் பேசியது:

ஆதிதிராவிட, பழங்குடியின தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்கவே இந்த திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். தமிழக அரசு வழங்கும் இத்தகைய திட்டங்களை தொழில் முனைவோா் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு வழங்கும் மானியத்தை தவிா்த்து, மீதமுள்ள கடனை முறையாக செலுத்த வேண்டும். அரசின் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்தி வங்கியில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று நிலையான தொழிலை மேற்கொள்வதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வலுவான பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்த முடியும்.

எனவே, தொழில்முனைவோா் அரசு வழங்கும் சலுகைகள், கடனுதவிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, தொழில்வளா்ச்சி அடைய வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் (பொறுப்பு) ப.ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளா் ஜமால் மொய்தீன், தாட்கோ மேலாளா் எஸ்.பிரேமா, மாவட்டத் தொழில் மைய திட்ட மேலாளா் சுரேஷ்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பாக்கியலட்சுமி, தமிழழகன் நல்லையன் சுகிசிவம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com