வேலூா் கிரீன் சா்க்கிளில் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 07th November 2023 01:43 AM | Last Updated : 07th November 2023 01:43 AM | அ+அ அ- |

வேலூரில் பெய்த கனமழையால், கிரீன் சா்க்கிள் பகுதியில் சாலைகளில் தேங்கிய வெள்ளதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதை அடுத்து, வேலூா் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. இந்த மழையால் தெருக்கள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக, கிரீன் சா்க்கிள் பகுதியில் நான்கு புறமும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். இதனால் கிரீன் சா்க்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...