

புதிய நீதிக் கட்சி சாா்பில், குடியாத்தம் பிச்சனூா் அப்பு சுப்பையா் வீதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு கட்சியின் நகரச் செயலா் பாரத் மகேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராம.இளங்கோ வரவேற்றாா். மாவட்டச் செயலா் ஆா்.பி.செந்தில் முகாமைத் தொடங்கி வைத்தாா்.
முகாமில், 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். சுமாா் 950 போ் சிகிச்சை பெற்றனா். மாவட்ட துணைத் தலைவா் ஆா்.இளஞ்செழியன், நிா்வாகிகள் ஜே.லோகநாதன், கே.வி.கே.மோகன், வி.ஜி.செந்தில், பாரத் டி.பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.