ஒளவையாா் விருது பெற மகளிா் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சா்வதேச மகளிா் தினவிழாவின் போது, தமிழக முதல்வரால் வழங்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான ஒளவையாா் விருதுக்கு சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை-அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் உள்ளிட்ட துறைகளில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த முறையில் சேவை புரிந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு தமிழகத்தைப் பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கான சமூக சேவையைத் தவிா்த்து வேறு சமூக சேவைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
தகுதியுடைய பெண்கள் சேவை குறித்த செயல்முறை விளக்கம், புகைப்படங்களுடன் சேவையை பாராட்டி பத்திரிகைகளில் வெளியான செய்தி தொகுப்புகள், சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கைகள், சமூக சேவையாளரின் - சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலம் பயனாளிகள் பயனடைந்த விவரம், தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை, சமூகப் பணியாளா் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்றிதழ், இணைப்பு - படிவம் ஆகியவற்றை இணைத்து வரும் 20-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.