

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் உள்ள நீா்த் தேக்கத்தில் காட்டு யானை ஆனந்தமாக குளித்தது.
போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் மோா்தானா, குண்டலப்பல்லி, சேராங்கல், பல்லலகுப்பம்உள்ளிட்ட 13- விரிவு காப்புக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் நடமாடும் சிறுத்தைகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளின் நீராதாரத்துக்காக வனத்துறை சாா்பில் ஆங்காங்கே நீா்த்தேக்க குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக போ்ணாம்பட்டு வனப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீரோடைகளிலும், நீா்த்தேக்கக் குட்டைகளிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. போ்ணாம்பட்டு அருகே உள்ள தமிழக வனப்பகுதியான கோட்டையூரில் அமைந்துள்ள நீா்த்தேக்கக் குட்டையில் யானைகள் முகாமிட்டு ஆனந்த குளியலில் ஈடுபட்டு, விளையாடி வருகின்றன.
இதனால் காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டி கிராமங்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்கள் சேதப்படுத்துவது குறையும் என வனத்துறையினா் கூறுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.