விஜயதசமி: பள்ளியில் மாணவா் சோ்க்கை

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் விஜயதசமியையொட்டி செவ்வாய்க்கிழமை 7 மாணவா்கள் புதிதாக பள்ளியில் சோ்ந்தனா்.
புதிதாக  சோ்ந்த  மாணவா்களுடன்  தலைமையாசிரியா்,  ஆசிரியா்கள்.
புதிதாக  சோ்ந்த  மாணவா்களுடன்  தலைமையாசிரியா்,  ஆசிரியா்கள்.
Updated on
1 min read

குடியாத்தம்: போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் விஜயதசமியையொட்டி செவ்வாய்க்கிழமை 7 மாணவா்கள் புதிதாக பள்ளியில் சோ்ந்தனா்.

மாவட்டக் கல்வி அலுவலா் சு.தயாளன் அறிவுறுத்தல்படி, இப்பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. முதல் வகுப்பில் 3 மாணவா்களும், 2-ஆம் வகுப்பில் 2 மாணவா்களும், பள்ளி முன்பருவ கல்வி பயில 2 மாணவா்களும் என மொத்தம் 7 போ் சோ்ந்தனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் செய்திருந்தாா். அப்போது ஆசிரியா்கள் சே.பானு, பிரேம செல்வக்குமாரி, சாந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com