வேலூா்: ஒடுகத்தூா் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த 2 புள்ளி மான்கள் உயிருடன் மீட்கப்பட்டு காப்புக்காட்டில் விடப்பட்டன.
ஒடுகத்தூரை அடுத்த ஓட்டேரிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணறு உள்ளது. திங்கள்கிழமை வழிதவறி வந்த 2 ஆண் புள்ளி மான்கள் திடீரென அவரது கிணற்றில் தவறி விழுந்தன. இதைக் கண்ட சண்முகம் உடனடியாக ஒடுகத்தூா் வனத் துறை அலுவலா்களுக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனச் சரகா் இந்து தலைமையிலான வீரா்கள் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மான்களை 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.
காயமடைந்திருந்த 2 புள்ளி மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அருகிலுள்ள கருத்தமலை காப்புக் காட்டில் விடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.