

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலூா் மாவட்ட நிா்வாகம், வேலூா் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் சனிக்கிழமை நடத்திய தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 370 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்து, தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
முகாமில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 1,796 போ் கலந்து கொண்டனா். இவா்களில் தோ்வு செய்யப்பட்ட 370 பேருக்கு முகாமிலேயே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் என்.இ.சத்யானந்தம் (குடியாத்தம்), எல்.ரவிச்சந்திரன் (கே.வி.குப்பம்), மகளிா் திட்ட இயக்குநா் யு.நாகராஜன், வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உதவி இயக்குநா் காந்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், ஊராட்சித் தலைவா் எஸ்.பி.சக்திதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.