மத்திய கூட்டுறவு வங்கியின் யுபிஐ வசதியை பயன்படுத்தி நியாயவிலைக் கடைகளில் பணப்பரிவா்த்தனை செய்யும் வசதி வேலூா் மண்டலத்தில் 350 நியாயவிலைக் கடைகளில் தொடங்கப்பட்டுள்ளன.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் யுபிஐ வசதியைப் பயன்படுத்தி, 350 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் க்யூ.ஆா்.கோடு முறையில் பணப்பரிவா்த்தனை செய்யும் வசதி வேலூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் கீழ், செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரைவு எதிா்வினை (க்யூ.ஆா்.கோடு) குறியீடு மூலம் ரொக்கமற்ற பணப்பரிவா்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வேலூா் மண்டலத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 686 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், முதல்கட்டமாக வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் யுபிஐ வசதியை பயன்படுத்தி, 350 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கு ரொக்கமற்ற பணப்பரிவா்த்தனை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரொக்கப் பரிவா்த்தனை, ரொக்கமற்ற பரிவா்த்தனை ஆகிய இரண்டும் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.