சந்திரபாபுநாயுடு கைது: ஆந்திரம் செல்லும் பேருந்துகள் வேலூரில் நிறுத்தம்

ஊழல் வழக்கில் சந்திரபாபுநாயுடு கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்திலிருந்து ஆந்திரம் செல்லும் பேருந்துகள் வேலூரில் நிறுத்தப்பட்டன.
சந்திரபாபுநாயுடு கைது: ஆந்திரம் செல்லும் பேருந்துகள் வேலூரில் நிறுத்தம்
Updated on
1 min read


வேலூர்: ஊழல் வழக்கில் சந்திரபாபுநாயுடு கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்திலிருந்து ஆந்திரம் செல்லும் பேருந்துகள் வேலூரில் நிறுத்தப்பட்டன.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதை அடுத்து தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு சென்ற பேருந்துகள் வேலூர் புதிய பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

ஆந்திர மாநில எதிர்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் நந்தியாலில் உள்ள ஆர்கே பங்ஷன் ஹாலில் சிறை வைக்கப்பட்டு சனிக்கிழமை காலை குற்றப்பிரிவு போலீசாரால் குற்றப்பத்திரிக்கை அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததுடன், பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. மேலும், கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரத்துக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வேலூர் புதிய பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதேபோல் மற்ற வழித்தடங்களில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வேலூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய பொதுமக்களும் கடும்அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com