குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
முதலாண்டு மாணவா்களையும், பெற்றோா்களையும் கல்வியியல் கல்லூரி முதல்வா் ஏ.எஸ்.அறிவுக்கொடி வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் இர.நடராசன் பேராசிரியா்களை அறிமுகம் செய்து வைத்தாா். பாடநூல், பயிற்சி குறித்து விளக்கினாா்.
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம் மாணவா்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினாா். பேராசிரியா்கள் எஸ்.செல்வகுமாரி, வி.கலைவாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கே.சாந்தி நன்றி கூறினாா்.