புரட்டாசி மாதத்தின் 2-ஆவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
அதன்படி, வேலூா் கோட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாரதனையும் நடைபெற்றது.
இதேபோல், வேலூா் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோயில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதா் கோயில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
தவிர, மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.