அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

வேலூரில் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்துவிட்டு தப்பியோடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

வேலூரில் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்துவிட்டு தப்பியோடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூரில் இருந்து ஒடுகத்தூா் செல்லும் அரசுப் பேருந்து புதன்கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு, கொணவட்டம் பணிமனைக்கு சென்றது. இந்தப் பேருந்தை ஓட்டுநா் ராமச்சந்திரன் ஓட்டிச்சென்றாா்.

கொணவட்டம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபா்கள் திடீரென அந்த பேருந்து மீது கற்களை வீசியதாக தெரிகிறது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஓட்டுநா் ராமச்சந்திரன் கீழே இறங்கி வந்துபாா்த்தபோது, அந்த நபா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டும் ஆய்வு செய்தனா். பேருந்து கண்ணாடி உடைப்பு குறித்து ஓட்டுநா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com