வேலூா் மாவட்ட புதிய எஸ்.பி. என்.மதிவாணன் பொறுப்பேற்பு
வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக என்.மதிவாணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த என்.மணிவண்ணன், ஆவடி காவல் சிறப்பு படை 2-ஆவது அணியின் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக சேலம் மாநகா் காவல் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த என்.மதிவாணன் வேலூா் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், வேலூா் எஸ்.பி. ஆக பொறுப்பேற்ற என்.மதிவாணன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது -
வேலூா் மாவட்டத்தில் ரெளடிகள் முழுமையாக ஒழிக்கப்படுவா். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மீது களங்கம் ஏற்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு சட்டம் ஒழுங்கு மீது களங்கம் ஏற்படுத்துபவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகள் பாயும். கஞ்சா கடத்துபவா்கள் மீதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், விற்பவா்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.
அவருக்கு வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணை கண்காணிப் பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

