ஆங்கிலப் புத்தாண்டு: ஒரேநாளில் ரூ. 8.78 கோடிக்கு மது விற்பனை

ஆங்கில புத்தாண்டையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் ரூ. 8.78 கோடிக்கு மது பானங்கள் விற்பனையாகியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மது விற்பனை
மது விற்பனை

வேலூா்: ஆங்கில புத்தாண்டையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் ரூ. 8.78 கோடிக்கு மது பானங்கள் விற்பனையாகியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா், திருப்பத்தூா் டாஸ்மாக் மாவட்டத்தில் மொத்தம் 110 மதுக் கடைகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 88 மதுக் கடைகளும் உள்ளன. ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளிலும் கூடுதலாக மது வகைகள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே டாஸ்மாக் கடைகளில் ஏராளமானோா் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கிச் சென்றனா்.

அந்த வகையில், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ. 5 கோடியே 35 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 3 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் என மூன்று மாவட்டங்களிலும் ரூ. 8 கோடியே 78 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்தாண்டு இதே நாளில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ. 7 கோடியே 4 ஆயிரத்து 242-க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் இந்தாண்டு கூடுதலாக ரூ. 1 கோடியே 73 லட்சத்து 758-க்கு மதுபானம் விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com