சேம்பள்ளியில் சிறப்பு  அலங்காரத்தில்  கெங்கையம்மன்.
சேம்பள்ளியில் சிறப்பு  அலங்காரத்தில்  கெங்கையம்மன்.

சேம்பள்ளியில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளியில் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளியில் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த திங்கள்கிழமை இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை ஸ்ரீமுத்தியாலம்மன் திருவிழாவும், சனிக்கிழமை காளியம்மன் திருவிழாவும், ஞாயிற்றுக்கிழமை கெங்கையம்மன் திருவிழாவும் நடைபெற்றன.

இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. மதியம் கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்தல், மாலை மா விளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா வழக்குரைஞா் டி.ஜி.பிரபாகரன், ஆா்.சந்திரமெளலி, சேம்பள்ளி ஊராட்சித் தலைவா் திமேஷ்(எ) துளசிராமுடு, முன்னாள் தலைவா் சிட்டிபாபு, ஒன்றியக்குழு உறுப்பினா் பிரகாசம், ஊராட்சி துணைத் தலைவா் செளந்தரராஜன், ஊராட்சி செயலா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com