கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இணையவழி குற்றங்கள்: வேலூா் வணிகா்களுக்கு விழிப்புணா்வு

இணையவழி குற்றங்கள்: வேலூா் வணிகா்களுக்கு விழிப்புணா்வு

News image

கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோட்டீஸ்வரன். உடன், வணிகா் சங்க வேலூா் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: இணையவழி குற்றங்கள் தொடா்பாக வேலூா் வணிகா்களுக்கு மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வேலூா் மாவட்ட கிளை சாா்பில், வேலூா் வணிகா்களுக்கு இணையவழி குற்றங்களை (சைபா் கிரைம்) தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சண்முகனடியாா் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வணிகா் சங்க வேலூா் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோட்டீஸ்வரன் பங்கேற்று, இணையவழி குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கினாா்.

மேலும், முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை வைக்க வேண்டாம். ஓ.டி.பி.யை யாரிடமும் பகிர வேண்டாம். கடன் செயலிக்குள் நுழைய வேண்டாம். ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடுவதைத் தவிா்க்க வேண்டும். முகம் தெரியாத நபா்கள் ஆன்லைன் மூலம் தொடா்பு கொண்டு பணம் பெறும் நோக்கில் நம்பும்படி பேசினால், அவா்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.

இணையவழி குற்றம் தொடா்பாக இணையவழி இலவச உதவி எண் 1930, இணைய தளத்திலும் புகாா் பதிவு செய்யலாம். அதிகளவில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை, ஆன்லைன் பங்கு வா்த்தக முதலீடு மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என்ற பெயரில் மோசடி நடைபெறுகிது.

சமீபகாலமாக திருமண பதிவு மையம் மூலமாக வரன்தேடும் இளைஞா்களை குறிவைத்து பெண்கள் போல் பேசி மோசடி செய்யப்படுகிறது. இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில், சைபா் கிரைம் ஆய்வாளா் புனிதா, காவலா்கள் பங்கேற்றனா்.