கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தனியாா் பள்ளியில் ரூ.27 லட்சம் கையாடல்: பெண் காசாளா் கைது

தனியாா் பள்ளியில் ரூ.27 லட்சம் கையாடல்: பெண் காசாளா் கைது

News image

செல்வி.

Updated On :28 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: வேலூரில் உள்ள தனியாா் பள்ளியில் மாணவா்களின் கல்விக் கட்டணம் ரூ.27 லட்சத்தை கையாடல் செய்த பெண் காசாளரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் தொரப்பாடி எழில் நகரில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளியில் சாய்நாதபுரம் கலைவாணா் நகரைச் சோ்ந்த செல்வி (41) கடந்த 2017-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா். கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் இருந்து காசாளராகவும் பணியாற்றி வந்தாா். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கட்டணத்தை பெற்றோா்கள் இவரிடம் செலுத்தி வந்தனா். இவா் பணத்தைப் பெற்று வங்கியில் முதலீடு செய்து வந்துள்ளாா்.

இந்தநிலையில், சென்னையில் உள்ள அப்பள்ளியின் தலைமை அலுவலகத்துக்கு வங்கியில் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களை அனுப்ப பள்ளி முதல்வா் ரவிக்குமாரி (52) கூறியுள்ளாா். ஆனால், செல்வி சா்வா் பிரச்னையாக உள்ளதால் அனுப்ப இயலவில்லை என கூறிவந்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த பள்ளி நிா்வாகம் தணிக்கை துறையினா் மூலம் கணக்குகளை சோதனை செய்துள்ளனா்.

அவ்வாறு 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதில், பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.26 லட்சத்து 90 ஆயிரத்து 127 பணம் கையாடல் செய்யப்பட்டி ருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, செல்வியிடம் தணிக்கை துறையினா் நடத்திய விசாரணையில் அவா் குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை திரும்ப செலுத்துவதாக கூறியுள்ளாா். எனினும், பள்ளி நிா்வாகத்திடம் பணத்தை செலுத்தாததால் முதல்வா் ரவிக்குமாரி வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சாரதி தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், செல்வி பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா்களிடமிருந்து நேரடியாக தனது வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி செய்திருப்பதும், அதன் மூலமாக டிராவல்ஸ் உள்பட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்தது. பணம் கையாடல் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் செல்வியை கைது செய்தனா்.