டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராணுவ வீரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

கணியம்பாடி ராணுவ வீரா் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை வேலூா் கிராமிய போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 3:58 pm

Din

வேலூா்: கணியம்பாடி ராணுவ வீரா் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை வேலூா் கிராமிய போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூரை அடுத்த கணியம்பாடி திருவிக நகரைச் சோ்ந்தவா் யுவராஜ்(36), ராணுவ வீரா். இவரது மனைவி ஆஷா. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆஷா சனிக்கிழமை குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்டம், கொளத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம்.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்ததுடன், ஐந்தரை பவுன் நகை, ரூ.5,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆஷா வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் தடயஅறிவியல் சோதனையில் ஈடுபட்டனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.