குடியாத்தம் அருகே கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலையை ப் பாா்வையிட்ட வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா.
வேலூர்
கட்டுமானப் பணியின்போது அம்மன் கற்சிலை கண்டெடுப்பு
குடியாத்தம் அருகே கட்டடப் பணிக்கு பள்ளம் தோண்டியபோது அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சிப் பள்ளி அருகே கழிப்பறை கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது சுமாா் 6 அடி ஆழத்தில் அம்மன் கற்சிலை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட அந்த சிலை வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகாவிடம் கொடுக்கப்பட்டது. பின்னா் கிராம மக்கள் அந்த சிலை தங்களுக்கு வேண்டும், அதை வைத்து வழிபாடு செய்யப் போவதாக வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். சிலையை எடுத்துச் சென்று வழிபாடு செய்யுங்கள், தேவைப்படும்போது கேட்டால் அந்த சிலையை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி, சிலையை கிராம மக்களிடம் கொடுத்து அனுப்பினாா்.

