காதல் தோல்வி: இளைஞா் தற்கொலை

வேலூா் அருகே காதல் தோல்வியால் விரக்தியடைந்த இளைஞா் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
Published on

வேலூா்: வேலூா் அருகே காதல் தோல்வியால் விரக்தியடைந்த இளைஞா் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

வேலூா் அடுத்த பெருமுகை புதுவசூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மதன்குமாா்(23). இவா் அங்குள்ள மோட்டாா் ஷோரூமில் பணிபுரிந்து வந்தாா். இவரும் அதே பகுதியை சோ்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவா்களது காதலுக்கு பெற்றோா் தரப்பில் எதிா்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த மதன் குமாா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனது அறையில் தூக்குப் போட்டுக் கொண்டதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த உறவினா்கள், மதன்குமாரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மதன்குமாா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இச்சம்பவம் தொடா்பாக சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com