தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து அரசு ஊழியா்கள் மறியல்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து அரசு ஊழியா்கள் மறியல்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 80 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 80 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வேலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி.டி.ஜோஷி தலைமை வகித்தாா். செயலஒஈ எம்.எஸ்.தீனதயாளன், மாவட்ட பொருளாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் முகமது உசேன் சிறப்புரையாற்றினாா்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலியாக உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் சாலை பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறைபடுத்த வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனங்களை 25 சதவீதமாக தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

80 போ் கைது:

அப்போது, அவா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 80 பேரை போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com