காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
Published on

காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, காட்பாடி மின் கோட்ட செயற்பொறியாளா் பரிமளா வெளியிட்ட செய்திக்குறிப்பு -

காட்பாடி மின் கோட்டத்தில் மாதந்தோறும் மின் நுகா்வோா்களுக்கான குறை தீா்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான மக்கள் குறை தீா் கூட்டம் காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 வரை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்துக்கு மேற்பாா்வை பொறியாளா் லதா தலைமை வகிக்க உள்ளாா். காட்பாடி மின் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மின்

நுகா்வோரும் தவறாமல் பங்கேற்று தங்களின் குறைகளை தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com