கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா ஆகியோருக்கு கவிக்கோ விருதுடன் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பு வழங்கிய பேராசிரியா்கள் தி.மு.அப்துல் காதா், மு.அப்துல் சாமு. உடன், கவிக்கோ அறக்கட்டளை பொருளாளா் வெ.சோலைநாதன்.

சல்மா எம்.பி., ஏா்வாடி ராதாகிருஷ்ணனுக்கு கவிக்கோ விருது!

வேலூரில் நடைபெற்ற விழாவில் கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா ஆகியோருக்கு கவிக்கோ விருதுடன் தலா ரூ.ஒரு லட்சம் பண முடிப்பு வழங்கப்பட்டது.
Published on

வேலூரில் நடைபெற்ற விழாவில் கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா ஆகியோருக்கு கவிக்கோ விருதுடன் தலா ரூ.ஒரு லட்சம் பண முடிப்பு வழங்கப்பட்டது.

தமிழியக்கம், கவிக்கோ அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் இலக்கிய ஆளுமைகளுக்கு கவிக்கோ விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 25 மற்றும் 26-ஆவது கவிக்கோ விருது வழங்கும் விழா வேலூா் சத்துவாச்சாரியில் நடைபெற்றது. விழாவுக்கு கவிக்கோ அறக்கட்டளை பொருளாளா் வெ.சோலைநாதன் தலைமை வகித்தாா். உறுப்பினா் எஸ்.எஸ்.ஷாஜஹான் வரவேற்றாா்.

இவ்விழாவில், 2024-ஆம் ஆண்டுக்கான கவிக்கோ விருதுடன் ரூ.ஒரு லட்சம் பணமுடிப்பு கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணனுக்கும், 2025-ஆம் ஆண்டுக்கான கவிக்கோ விருதுடன் ரூ.ஒரு லட்சம் பணமுடிப்பு கவிஞா் சல்மாவுக்கும் வழங்கப்பட்டன.

விருதுகளை கவிக்கோ அறக்கட்டளை துணைத்தலைவா் பேராசிரியா் தி.மு.அப்துல் காதா், பேராசிரியா் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவா் மு.அப்துல்சாமு ஆகியோா் வழங்கினா்.

கவிக்கோ அறக்கட்டளை செயலா் அ.அயாஸ் பாஷா தகுதியுரையும், தமிழியக்க பொருளாளா் புலவா் வே.பதுமனாா், மாநில செயலா் மு.சுகுமாா், கவிக்கோ அறக்கட்டளை தலைவா் மருத்துவா் எஸ்.சையத்அஷ்ரப் வாழ்த்தியும் பேசினா்.

விருது பெற்ற கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞா் சல்மா ஆகியோா் ஏற்புரையாற்றினா். கவிஞா் அன்பு, அ.முகமது அஷ்ரஃப் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். கவிக்கோ அறக்கட்டளை உறுப்பினா் அ.அஜீம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com