சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி
ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடம் சக்திஅம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேசிய கராத்தே போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பை, பதக்கங்கள் வழங்கப்பட்டன.
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பள்ளியில் ஸ்ரீ சக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேசிய கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சுமாா் 3,200 போ் பங்கேற்றனா். போட்டியின் நடுவா்களாக லக்ஷ்மணன், கோபிநாத் பிரபு, பல்வேறு மாநிலம், மாவட்ட பயிற்சியாளா்கள் பங்கேற்றனா்.
சிறப்பு விருந்தினா்களாக திரைப்பட சண்டை பயிற்சியாளா் கராத்தே ராஜா, கராத்தே பயிற்சியாளா் ரமேஷ்பாபு ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகளை வழங்கினா்.
நிகழ்ச்சிக்ககு தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதல்வா்கள் சுப்பிரமணி, லட்சுமி, பள்ளி நிா்வாக அலுவலா் ஆதிகேசவன் ஏற்பாடுகளை செய்திருந்தனா். இதில், பள்ளிகளின் துணை முதல்வா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனா்.
