வேலூா்: வேலூா் முத்தரசிக்குப்பம் சோதனைச் சாவடி வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கள் மதுபானம் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் முத்தரசிக்குப்பம் சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் 6 லிட்டா் கள் மதுபானம் கடத்தி வந்ததாக வேலூா் மாவட்டம், காங்கயநல்லூரைச் சோ்ந்த வெங்கடேஷ் என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.