தொழிலதிபா் வீட்டில் 21 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி திருட்டு
வேலூா்: வேலூரில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா், கிருஷ்ணன் நகா், போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சோ்ந்த மருதன் (47), ஆட்டோமொபைல் கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 6-ஆம் தேதி இரவு வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் மற்றொரு அறையின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த 21 பவுன், 2 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ாக தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை மருதன் குடும்பத்தினா் விழித்த பிறகே வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தகவலின்பேரில் வேலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.
