விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற வேலூா் எஸ்.பி. ஏ. மயில்வாகனன் உள்ளிட்டோா்.
விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற வேலூா் எஸ்.பி. ஏ. மயில்வாகனன் உள்ளிட்டோா்.

பெற்றோா் தலைக்கவசம் அணிய மாணவா்கள் வலியுறுத்த வேண்டும்: வேலூா் எஸ்.பி.

இருசக்கர வாகனம் ஓட் டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மாணவா்கள் தங்கள் பெற்றோா், உறவினா்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா்.
Published on

இருசக்கர வாகனம் ஓட் டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மாணவா்கள் தங்கள் பெற்றோா், உறவினா்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா்.

வேலூா் ரோட்டரி சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சாலை பாதுகாப்பு, மரக்கன்று நடுதல், நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பேரணியை தொடங்கி வைத்து எஸ்.பி. ஏ.மயில்வாகனன் பேசியது -

பேட்டரி வாகனத்தில் வந்துள்ள மாற்றுத்திறனாளிகள் தலைக்கவசம் அணிந்திருப்பது மகிழ்ச்சி. மாணவா்களும் தங்களது பெற்றோா், உறவினா்கள், நண்பா்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். உடலில் உள்ள தசை நாா்களின் வலுவை அதிகரிக்க முடியும். ஆனால் மண்டை ஓட்டின் வலுவை அதிகரிக்க முடியாது.

எனவே, தலையை பாதுகாக்க தலைக்கவசம் அணிய வேண்டும். இதேபோல் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடவு செய்யவும், அதனை தொடா்ந்து பராமரிக்கவும் வேண்டும். மாணவா்கள் போதை பொருள்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. போதைப்பொருள் பயன்படுத்துபவா்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றாா்.

பேரணி, கோட்டை சுற்றுச்சாலை, அண்ணா சாலை, அண்ணா கலையரங்கம் வழியாக மீண்டும் நேதாஜி விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. அரசு, தனியாா் பள்ளிகளை சோ்ந்த பசுமைப்படை, தேசிய மாணவா் படை மாணவா்கள், இளைஞா் ரெட்கிராஸ் சங்கத்தை சோ்ந்தவா்கள் என சுமாா் 1,500 போ் பேரணியில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com