மாற்றுத்திறனாளிகள், முதியவா்களுக்கு உபகரணங்கள் வழங்க முகாம்கள்
வேலூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், உபகரணங்கள் தேவைப்படும் முதியவா்கள் டிச. 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அலிம்கோ நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கிட பயனாளிகளை தோ்வு செய்வதற்கான முகாம்கள் வேலூா் மாவட்டத்தில் டிச. 11-இல் காட்பாடி வட்டத்தில் உள்ள ஒா்த் அறக்கட்டளையிலும், டிச.12-இல் குடியாத்தம் வட்டத்தில் உள்ள கரிகிரி மருத்துவமனை வளாகத்திலும், டிச.13-இல் அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூரில் உள்ள கலைஞா் நூற்றாண்டு அரங்கத்திலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அதிகளவிலான மாற்றுத் திறனாளிகள், உபகரணங்கள் தேவைப்படும் முதியவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
