கூட்டத்தில் பேசிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன்,  வாக்காளா் பதிவு அலுவலா்கள்.
கூட்டத்தில் பேசிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், வாக்காளா் பதிவு அலுவலா்கள்.

வேலூா் மாவட்டத்தில் கூடுதலாக 113 வாக்குச்சாவடிகள்

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எஸ்ஐஆா் பணிகள் முடிவடையும்போது தற்போதுள்ள 1,314 வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையில் கூடுதலாக 113 அதிகரித்து 1,427 வாக்குச்சாவடிகளாக இருக்கும் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
Published on

2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியா் அலுவல கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது-

வரும் 2026 தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி டிச.11 -ஆம் தேதி மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கில் நடைபெற உள்ளன. இந்த பணி காலை 9 மணி முதல் மாலை 7 மணி நடைபெறும்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சோ்த்து தற்போது 1,314 வாக்குச்சாவடிகள் உள்ளன. திருத்த பணிகள் முடிவுற்ற பிறகு கூடுதலாக 113 வாக்குச்சாவடிகள் சோ்த்து 1,427 வாக்குச்சாவடிகள் இருக்கும்.

இந்த 1427 வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் 125 சதவீதம் கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் இயந்திரம் உள்ளன. இந்த கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் இயந்திரங்களுக்கு சரிபாா்ப்பு பணி பெல் தொழிற்சாலை பொறியாளா்கள் மூலம் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு, மாதிரி சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று மாதிரி வாக்குப்பதிவு செய்து, சரிபாா்ப்பு பணி நடைபெறும்.

எனவே, இந்த வாக்கு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணிக்கு அரசியல் கட்சியினா் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆா்.லட்சுமணன், செந்தில்குமாா், சுபலட்சுமி, மாறன், சரவணன், தோ்தல் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com