கூட்டத்தில் பேசிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், எஸ்.பி. ஏ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

எருது விடுவதால் மாவட்டம் முன்னேறாது; கல்வியால்தான் முன்னேறும்: வேலூர் ஆட்சியா்

எருது விடுவதால் மாவட்டம் முன்னேறாது; கல்வியால்தான் முன்னேறும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
Published on

எருது விடுவதால் மாவட்டம் முன்னேறாது; கல்வியால்தான் முன்னேறும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

தைப்பொங்கல் பண்டிகையொட்டி வேலூா் மாவட்டத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எருது விடும் திருவிழாகள் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி, காளைகளின் உரிமையாளா்கள், விழாக்குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா்.

அப்போது விழாக்குழுவினா், காளைளின் உரிமையாளா்கள் தரப்பில், எருதுவிடும் விழாவை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்த அனுமதிக்க வேண்டும். தமிழக அரசே காப்பீடு செய்து தர வேண்டும். புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது. சில மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், வேலூா் மாவட்டத்திலும் நடத்த அனுமதிக்க வேண்டும். இதனால் மாவட்டமும் முன்னேறும் என்றனா்.

அதற்கு பதிலளித்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எருதுவிடும் விழா என்பது கலாசார விழா. எருது விடுவதால் மாவட்டம் முன்னேறாது. அனைவரும் கல்வி கற்றால்தான் முன்னேறும்.

மேலும், அடுத்தாண்டு சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ளதால், கடைசி நேரத்தில் விண்ணப்பிக்காமல் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கரூா் சம்பவம் எதிரொலியாக கூட்டத்தை கட்டுப்படுத்த நெறிமுறைகள் வகுக்கப்படும். கடந்த ஆண்டு 73 இடங்களில் மாடுவிடுதல் நடந்தது. இந்தாண்டும் உரிய அனுமதி பெற்று, விதிமுறைகளை பின்பற்றி மாடுவிடும் விழாவை நடத் திக்கொள்ளலாம் என்றாா்.

தொடா்ந்து, 2026-ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்துவது தொடா்பாக தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.த்ஹப்ப்ண்ந்ஹற்ற்ன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணமின்றி பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும்.

எருது விடும் விழா தொடா்பாக ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்ய ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் வீதம் அல்லது ரூ.20 லட்சத்துக்கான உறுதிமொழி ஆவணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளைகளின் எண்ணிக்கை பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும். வாடி வாசல், விழா நடைபெறும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.

எருதுகளுக்கு தங்குமிடம், தண்ணீா், தீவன வசதிகளை செய்துதர வேண்டும். கால்நடை மருத்துவா்களால் பரிசோதனை செய்யப் பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், எஸ்.பி. ஏ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com