இருசக்கர வாகனம் திருடிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
வேலூரில் இரு சக்கர வாகனம் திருடிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் செம்பேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜிதுரை (31). இவா் கொணவட்டம் ஜிஎஸ் மஹால் எதிரே உள்ள வணிக வளாகத்தில் போா்வெல் போடும் அலுவலகம் நடத்தி வருகிறாா். கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை வணிக வளாகம் முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை.
இது குறித்த புகாரின்பேரில், வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வசந்தபுரத்தைச் சோ்ந்த நிஷாந்த்குமாா் (23), வசந்தகுமாா் (22) ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவா் (எண் 4) மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நிஷாந்த்குமாா், வசந்தகுமாா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து நீதிபதி ரஞ்சிதா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
