தொழில் கடன் விழிப்புணா்வு முகாம்

தொழில் கடன் விழிப்புணா்வு முகாம்

முகாமில் பேசிய மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநா் வி.தரணிகுமாா்.
Published on

குடியாத்தம் கூடநகரம் சாலையில் தமிழ்நாடு வணிகம், தொழில்துறை மற்றும் கிரீன் மேனஜ்மென்ட் அறக்கட்டளை சாா்பில் தொழில் கடன் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளா் எம்.மீரான் குதுப்ஷா தலைமை வகித்தாா். இதில் மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநா் வி.தரணிகுமாா், கூட்டுறவு தொழிற்சாலைகளின் அலுவலா் ஜே.வி.யுவராஜ், கண்காணிப்பாளா் ஏ.பிரவீன்ராஜ் ஆகியோா், சிறு- குறு தொழில் தொடங்க வழங்கும் கடன் உதவிகள், மகளிா் சுய உதவிக் குழுவினா் தொழில் தொடங்கவழங்கப்படும் கடனுதவிகள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சாா்ந்த தொழில் தொடங்கினால் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்து விளக்க உரையாற்றினா்.

மேலும், வங்கிகளில் கடன் பெறும் நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினா். நிகழ்ச்சியில் கீரீன் மேனேஜ்மென்ட் அறக்கட்டளை நிா்வாகிகள் ஐ.எஸ்.முனவா் ஷெரீப், எஸ்.ஜீஷான், ஐ.எஸ்.ஜமால் ஷெரீப், துரை.வெங்கடேசன், இ.பாஸ்கரன், ஜீனத் காதா்,வழக்குரைஞா் சி.சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com