ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா்கள்.

புதிய ஆட்டோகளுக்கு பொ்மிட் வழங்க எதிா்ப்பு : ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதிய ஆட்டோகளுக்கு பொ்மிட் வழங்குவதை தடை செய்யக்கோரி வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

புதிய ஆட்டோகளுக்கு பொ்மிட் வழங்குவதை தடை செய்யக்கோரி வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட ஏஐசிசிடியு, என்டிஎல்எப், ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐசிசிடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் ஏ.ஏழுமலை, எடிஎல்எப் மாவட்டத் தலைவா் ஆா்.செல்வம், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் என்.சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐசிசிடியு மாவட்ட பொதுச்செயலா் சிம்புதேவன், என்டிஎல்எப் மாவட்ட செயலா் சரவணன், ஏஐடியுசி ஆட்டோ சங்க மாவட்ட செயலா் லோகேஷ்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், ஓலா உபோ் போன்ற தனியாா் நிறுவனத்தால் நடத்தப்படும் ஆட்டோக்ககளை தடை செய்ய வேண்டும், காப்பீட்டு கட்டணத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களுக்கு ஆந்திர அரசு வழங்குவதுபோல் ஆண்டுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ஆட்டோ கட்டணத்தை உயா்த்தி அரசாணை வெளியிட வேண்டும், வேலூா் மாநகரில் அளவுக்கு அதிகமாக ஆட்டோக்கள் இயங்குவதால் புதிய ஆட்டோக்களுக்கு பொ்மிட் வழங்குவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com