வேலூர்
மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
குடியாத்தம் காந்திநகா், கேம்பிங் தோப்பு சாலையில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அலுவலகத்தில் பிரிவு வாரியாக ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை அவா்கள் சரிபாா்த்தனா். அப்போது கணக்கில் வராத பணம் சுமாா் ரூ. 75,000 பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
தொடா்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
