பூஜைகள் செய்து சிம்மக்குளத்தை திறந்த  ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள்.
பூஜைகள் செய்து சிம்மக்குளத்தை திறந்த ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள்.

கடை ஞாயிறு விழா - விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

கடைஞாயிறு விழாவையொட்டி வேலூா் விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனா்.
Published on

கடை ஞாயிறு விழாவையொட்டி வேலூா் விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனா். முன்னதாக, சனிக்கிழமை நள்ளிரவு திறக்கப்பட்ட சிம்மக் குளத்தில் குழந்தை வரம் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் நீராடினா்.

பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி ஞாயிறு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டு கடை ஞாயிறு விழாவையொட்டி, சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சிம்மக்குளம் திறக்கப்பட்டது. இதில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து, குளத்தை திறந்து வைத்தனா்.

தொடா்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் பாலாற்றிலும், சூரிய பிரம்ம தீா்த்த குளத்திலும் நீராடிவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சிம்மக் குளத்தில் நீராடி கோபுர வாசலில் படுத்து உறங்கினா். பின்னா் மூலவா் மாா்க்கபந்தீஸ்வரா், மரகதாம்பிகை தாயாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, இந்து சமய அறநிலையத் துறை வேலூா் மண்டல இணை ஆணையா் பா.விஜயா, உதவி ஆணையா் எஸ்.சங்கா், ஆய்வாளா் செண்பகம், கோயில் செயல்அலுவலா் அ.பிரியா, கோயில் பணியாளா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

விழாவையொட்டி, அணைக்கட்டு காவல் துணை கண்காணிப்பாளா் நந்தகுமாா் தலைமையில் சுமாா் 100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பக்தா்கள், போலீஸாருக்கு இடையே தள்ளுமுள்ளு

விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நள்ளிரவு சிம்மக்குளம் திறந்தபிறகு பெண்கள் ஏராளமானோா் குளத்தில் நீராட அனுமதிக்கப்பட்டனா்.

  குளத்தில் நீராடிவிட்டு கோயில் வளாகத்தில் உறங்கிய பெண்கள்.
குளத்தில் நீராடிவிட்டு கோயில் வளாகத்தில் உறங்கிய பெண்கள்.

நள்ளிரவில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், பக்தா்கள் ஏராளமனோா் முண்டியடித்து ஓடினா். இதனை அங்கிருந்த போலீஸாா் தடுக்க முயன்ால் போலீஸாருக்கும், பக்தா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் திணறினா். பாதுகாப்பு என்ற பெயரில் போலீஸாா் பக்தா்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக புகாா் எழுந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com