குடும்ப பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு
பள்ளிகொண்டாவில் குடும்பப் பிரச்னையால் தீக்குளித்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (37). இவருக்கு திருமனமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா். குடும்பத்தில் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால் மனமுடைந்த முருகன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளாா்.
தொடா்ந்து, அவரின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து பாா்த்தபோது உடல் முழுக்க தீப்பற்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை இரவு முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
