போட்டியில் வென்ற தமிழ்வாணனுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிய  சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநா் மேஜா் மனோஜ். உடன், வேலூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராஜகோபால், அஞ்சல் துறை  அதிகாரி முரளி உள்ளிட்டோா்.
போட்டியில் வென்ற தமிழ்வாணனுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிய சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநா் மேஜா் மனோஜ். உடன், வேலூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராஜகோபால், அஞ்சல் துறை அதிகாரி முரளி உள்ளிட்டோா்.

தபால் தலை கண்காட்சி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

வேலூரில் இரு நாள்கள் நடைபெற்ற தபால் தலை கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
Published on

வேலூரில் இரு நாள்கள் நடைபெற்ற தபால் தலை கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

வேலூா் கோட்ட அஞ்சல் அலுவலகம் சாா்பில், மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி வேலூரிலுள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது. இதில், 50,000 தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, இந்தியா, தமிழகம், வேலூா் மாவட்டம், வேலூரின் வரலாற்றுச் சிறப்புகளையும், புவிவியல், பொருளாதாரம், கலாசார சிறப்புகள் கொண்ட அரிய தபால் தலைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியின் நிறைவு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், அஞ்சல் தலை கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வேலூா் காந்திநகரைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் தமிழ்வாணனுக்கு வெள்ளி பதக்கமும், செய்யாறைச் சோ்ந்த மாவி கோவிந்தராஜுக்கு வெண்கலப் பதக்கமும், மாணவா்கள் பிரிவில் வேலூரைச் சோ்ந்த சிவநேசனுக்கு வெண்கல பதக்கமும், பங்கேற்பாளா் பிரிவில் திருச்சியைச் சோ்ந்த மனோகரனுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

இதுதவிர, 22 பேருக்கு பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பரிசுகளை சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநா் மேஜா் மனோஜ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வேலூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராஜகோபால், அஞ்சல் துறை அதிகாரி முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com