நாட்டு துப்பாக்கி, பைக் பறிமுதல்: தப்பியோடிய 3 பேருக்கு வலை

அரியூா் அருகே நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா்.
Published on

அரியூா் அருகே நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நபா்கள் புகுந்து வன விலங்குகளை வேட்டையாடுவது தொடா்ந்து வருகிறது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளிகொண்டா பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், அரியூா் காவல் உதவி ஆய்வாளா் தென்னரசி தலைமையில் போலீஸாா் ஊசூா் முந்திரி தோப்பு பகுதியில் திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ஊசூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் போலீஸாரை கண்டதும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் உடனடியாக தாங்கள் வந்த இருசக்கர வாகனம், நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து, போலீஸாா் அந்த இருசக்கர வாகனம், நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com