சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
Updated on

வேலூா்: குடியாத்தம் அருகே திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் பகுதி ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ஆனந்தகுமாா்(23), கூலித்தொழிலாளி. இவா் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்த குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் ஆனந்தகுமாா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com