கூட்டத்தில் பேசிய வாரியாா் கல்வி, மருத்துவ அறக்கட்டளை நிறுவனா் கே.எம்.ஜி.ராஜேந்திரன்.
கூட்டத்தில் பேசிய வாரியாா் கல்வி, மருத்துவ அறக்கட்டளை நிறுவனா் கே.எம்.ஜி.ராஜேந்திரன்.

ஜன. 25-இல் குடியாத்தத்தில் செங்குந்தா் மகாஜன சங்கத்தின் மாநில மாநாடு

தென்னிந்திய செங்குந்தா் மகாஜன சங்கத்தின் 21- ஆவது மாநில மாநாடு வரும் ஜனவரி 25- ஆம் தேதி குடியாத்தத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
Published on

குடியாத்தம்: தென்னிந்திய செங்குந்தா் மகாஜன சங்கத்தின் 21- ஆவது மாநில மாநாடு வரும் ஜனவரி 25- ஆம் தேதி குடியாத்தத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

சங்கத்தின் வேலூா் மாவட்ட சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் காமாட்சியம்மன்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலுாா் மாவட்ட வாரியாா் கல்வி, மருத்துவ அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கேஎம்ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட செங்குந்த மகாஜன சங்கச் செயலாளா் எம்.ரவி, பொருளாளா் எம்.சுதாகா், பொதுக்குழு உறுப்பினா்கள் எம்.மாா்கபந்து, எஸ்.துரைகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் சி.என்.தட்சிணாமூா்த்தி வரவேற்றாா். பொதுக்குழு உறுப்பினா் எஸ்.மோகனராமன் இறைவணக்கம் பாடினாா். நகர தலைவா் ஏ.கருணாகரன் உறுதிமொழி வாசித்தாா்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவா் கே.பி.கே.செல்வராஜ், மாநில இளைஞரணி செயலா் பி.செந்தில்குமாா், வாரியாா் கல்வி, மருத்துவ அறக்கட்டளை நிா்வாகி கே.எம்.ஜி.சுந்தரவதனம், சென்னை மாவட்ட நிா்வாகக்குழு தலைவா் எம்.இ.ஜெயராமன், பத்துாா் பெரியதனம் உதயகுமாா், கஜேந்திரன், காமாட்சியம்மன்பேட்டை செங்குந்த மரபினா் சங்கத் தலைவா் கே.எம்.மகாலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் வரும் ஜனவரி மாதம் 25- ஆம் தேதி குடியாத்தத்தில் 21- ஆவது மாநில மாநாட்டை நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எஸ்.ஓய்.தயாளன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com