கே.வி.குப்பம் ஒன்றியத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாமைத்  தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

வேலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ், கால்நடைகளுக்கு 8-ஆவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
Published on

வேலூா் மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ், கால்நடைகளுக்கு 8-ஆவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கே.வி.குப்பம் ஒன்றியம், பி.என்.பாளையம் ஊராட்சிக்குள்பட்ட குக்கலப்பள்ளி கிராமத்தில் இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்துப் பேசியது:

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ், கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் 29-12-2025 முதல் 18-01-2026 வரை 21- நாள்கள் நடைபெற உள்ளது.

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

மேலும், பால் உற்பத்தி கடுமையாக குைல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குைல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பெரும்பாலான கால்நடை உரிமையாளா்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனா்.

எனவே, கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது. குளிா் மற்றும் பனிக் காலங்களில் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் கோமாரி நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது. கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீா், உமிழ்நீா், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.வேலூா் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த 1,67,750- கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகளுக்கு தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், கால்நடைத் துறை இணை இயக்குநா் மணிமாறன், உதவி இயக்குநா் அந்துவன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com