பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன், கைது செய்யப்பட்டவா்கள்.
வேலூர்
75 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
ஒடிஸா மாநிலத்திலிருந்து லாரியில் கடத்த வரப்பட்ட 75- கிலோ கஞ்சாவை பரதராமி போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2- பேரை கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்திலிருந்து லாரியில் கடத்த வரப்பட்ட 75- கிலோ கஞ்சாவை பரதராமி போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2- பேரை கைது செய்தனா்.
குடியாத்தம் அடுத்த பரதராமி போலீஸாா், ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது 75- கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக திருவண்ணாமலையைச் சோ்ந்த எம்.பிரகாஷ்(35), வாணியம்பாடியைச் சோ்ந்த பி.வெங்கடேசன்(44) ஆகிய இருவரை கைது செய்தனா்.